/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்பு வாரம் வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்பு வாரம்
வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்பு வாரம்
வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்பு வாரம்
வாசிப்பு திறனை மேம்படுத்த பள்ளிகளில் வாசிப்பு வாரம்
ADDED : ஜூன் 07, 2025 11:28 PM
திருப்பூர்: 'அரசுப்பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தும் வகையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை வாசிப்பு வாரம் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்,' என, பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு குழு விவாதம், நடிப்பு, கலந்துரையாடல், கதை சொல்லுதல், பட்டிமன்றம் உள்ளிட்ட வாசிப்பு திறன் நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளது. இதற்காக, 'தமிழ்நாடு அரசு சின்னங்கள், நெகிழியை தவிர்ப்போம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பனைமரத்தின் சிறப்பு, தேச தலைவர் ஜவஹர்லால் நேரு, இயற்கை அளித்த கொடை, உடலினை உறுதி செய், நேர்மையின் சிறப்பு, தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்கு காமராஜர் ஆற்றிய பணி, எனக்கு பிடித்த நண்பன் உள்ளிட்ட தலைப்புகள் வழங்கப்பட உள்ளது.
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான துவக்க நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியருக்கான வாசிப்பு இயக்கம், முதல் கட்ட பணிகள் குறித்து தொடக்க கல்வித்துறை மூலம், தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தல் விரைவில் வழங்கப்பட உள்ளது.