Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ லஞ்சம், ஊழலில் திளைக்கும் மாநகராட்சி அ.தி.மு.க., திண்ணை பிரசாரத்தில் தாக்கு

லஞ்சம், ஊழலில் திளைக்கும் மாநகராட்சி அ.தி.மு.க., திண்ணை பிரசாரத்தில் தாக்கு

லஞ்சம், ஊழலில் திளைக்கும் மாநகராட்சி அ.தி.மு.க., திண்ணை பிரசாரத்தில் தாக்கு

லஞ்சம், ஊழலில் திளைக்கும் மாநகராட்சி அ.தி.மு.க., திண்ணை பிரசாரத்தில் தாக்கு

ADDED : ஜூன் 07, 2025 11:29 PM


Google News
Latest Tamil News
அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகர் மாவட்ட ஜெ.பேரவை சார்பில், தி.மு.க., அரசை கண்டித்து, திண்ணை பிரசாரம் 15. வேலம்பாளையம் சிறு பூலுவப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்றது.

கவுன்சிலர் தங்கராஜ், தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது :

இன்னும் ஒன்பது அமாவாசைக்கு பிறகு ஆட்சி மாற்றம் நடக்க போகிறது. இனி மக்கள் விரும்புகின்ற அ.தி.மு.க., ஆட்சி வரப்போகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டணம் உயர்வு, வீட்டு வரி உயர்வு, குப்பை வரி உயர்வு, இப்படி பல வகையான வரி உயர்வால் மக்கள் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளனர்.

தி.மு.க., ஆட்சிக்கு வரும் போதெல்லாம் திருப்பூர் மக்களுக்கு கஷ்ட காலம் தான். திருப்பூர் தொழில் அனைத்தும் ஒடிசா, பீகார், மத்திய பிரதேசத்திற்கு செல்கிறது. அங்கு மின் கட்டணம் சலுகை விலையில் வழங்கப்படுகிறது. வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது.

நமது முதல்வர், நமது மாநிலத்தில் தொழில்களை தக்கவைத்து கொள்ள முயற்சி மேற்கொள்ளாமல், அடிக்கடி வெளிநாட்டுக்கு சென்று அங்குள்ள தொழிலதிபர்களை தமிழ்நாட்டுக்கு வரும்படி அழைக்கிறார். இது ஒரு கேலி கூத்தாக உள்ளது.

முதல்வரின் நாடகம் ஒன்பது அமாவாசையில் முடிய போகிறது. திருப்பூர் மாநகராட்சி, ஊழலில் சிறந்து விளங்குகிறது. மாநகராட்சியை அடமானம் வைத்து, 160 கோடி கடன் வாங்கி உள்ளனர். அதில் ரோடு போட டெண்டர் வைத்து பாதிக்கு மேல் ஊழல் செய்து விட்டனர். இன்னும் ரோடு போடவில்லை. லஞ்சம், ஊழலில் திருப்பூர் மாநகராட்சி திளைத்துக் கொண்டிருக்கிறது.

குப்பை துவங்கி, நாய்களுக்கு கருத்தடை வரை அனைத்திலும் ஊழல் நடக்கிறது. திடக்கழிவு மேலாண்மையில் திட்டமில்லாத மாநகராட்சியாக உள்ளது. இதனை சட்டமன்றத்தில் பேச சபாநாயகர் அனுமதிப்பதில்லை. லஞ்சம் ஊழலற்ற நிர்வாகம் நடக்க, திருப்பூர் மாநகராட்சிக்கு நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரியை கமிஷனராக நியமிக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தால் உயர்த்தப்பட்ட வரி குறைக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், வடக்கு தொகுதி எம்.எல்.ஏ விஜயகுமார், கவுன்சிலர் அன்பகம் திருப்பதி, ஜெ.பேரவை மாவட்ட இணை செயலாளர் நீதிராஜன், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் சாமிநாதன், பகுதி செயலாளர்கள் கனகராஜ், ஹரிஹர சுதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us