ADDED : மே 24, 2025 11:26 PM

திருப்பூர்: திருப்பூர், சிறுபூலுவப்பட்டியில் இருந்து, காவிலிபாளையம் செல்லும் சாலையில், தினசரி ஏராளமான வாகனங்கள் பயணிக்கின்றன.
இச்சாலையோரம் உள்ள குழியில் வாகனங்கள் நிலைத்தடுமாறி விபத்தை சந்திக்காமல் இருக்க சிவப்பு துண்டு சுற்றப்பட்ட தடுப்பு வைக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் சற்று நிலைத்தடுமாறினாலும் விபத்து சந்திக்க நேரிடும் என்பதால் கவனமுடன் பயணிக்க வேண்டியுள்ளது. சம்பந்தப்பட்ட துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.