ADDED : மே 24, 2025 11:26 PM

திருப்பூர்: திருப்பூரில் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின், 1,350வது சதய விழா நேற்று அனுசரிக்கப்பட்டது. மாநகராட்சி அலுவலகம் முன்பு வைக்கப்பட்ட அவரின் உருவப்படத்துக்கு துணை மேயர் பாலசுப்ரமணியன் மரியாதை செலுத்தினார்.
திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த பெரும்பிடுகு முத்தரையர் சுவரன் மாறனின் உருவப்படத்துக்கு திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், உட்பட பலர் மலர்துாவி மரியாதை செலுத்தினார். எம்.பி.சி., கூட்டமைப்பு மாவட்ட தலைவர் சேகர், மாநகர செயலாளர் கண்ணன், மாநகர துணை செயலாளர் உதயகுமார், பா.ஜ., மாவட்ட துணை தலைவர் பாலு, பொதுசெயலாளர் அருண், பொருளாளர் ரவிக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட முத்தரையர் ஒருங்கிணைப்பு குழு அருண்மொழிவர்மன், தர்மராஜ், வடிவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.