ADDED : ஜூன் 30, 2025 04:23 AM
காங்கேயம்: ஈரோடு மாவட்டம் கொடுமுடியை அடுத்த முருகம்பாளை-யத்தை சேர்ந்தவர் பூபதி, 40; கரூர் மாவட்டம் வேலாயுதம்பா-ளையம் போலீஸ் ஸ்டேஷன் குற்றப்பிரிவு தலைமை காவலர். நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து, புல்லட் பைக்கில் ஊர் திரும்பினார்.
திருப்பூர் மாவட்டம் முத்துார், ஊடையம் ரோடு வேப்பமரம் பகுதியில் நேற்று காலை, 7:00 மணியளவில் சென்றார். சாலை வளைவில் கட்டுப்பாட்டை இழந்த பைக், சாலையோர காட்-டுக்குள் பாய்ந்தது. அப்போது மைல் கல்லில் தலை மோதியதில் பலத்த காயமடைந்து பலியானார். வெள்ளகோவில் போலீசார் சட-லத்தை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான ஏட்டு பூபதிக்கு மனைவி இந்து-மதி மற்றும் 10 வயதில் மகன், ௮ வயதில் மகள் உள்ளனர்.