Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஏப்., 4ல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கும்

ஏப்., 4ல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கும்

ஏப்., 4ல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கும்

ஏப்., 4ல் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் துவங்கும்

ADDED : மார் 22, 2025 11:02 PM


Google News
திருப்பூர்: நாளை மறுதினத்துடன் பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் நிறைவடைய உள்ள நிலையில், ஏப்., 4ம் தேதி விடைத்தாள் திருத்தும் பணி துவங்குகிறது.

கடந்த, 3ம் தேதி பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. 25ம் தேதியுடன் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிகிறது. மே, 9ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

நாளை மறுதினத்துடன் (வரும், 25ம் தேதி) தேர்வுகள் முடியும் நிலையில், விடைத்தாள் திருத்தும் பணி ஏப்., 4ம் தேதி துவங்க ஏற்பாடுகள் துவங்கியுள்ளது. தேர்வுகள் நடந்து கொண்டிருப்பதால், தற்போதைக்கு தேர்வு முடிந்த பின், விடைத்தாள்கள் 'பண்டலிங்' செய்யப்பட்டு, மையங்களில் பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளது.

ஏப்., முதல் வாரத்தில் வழித்தட அலுவலர்கள் வாயிலாக விடைத்தாள் சேகரிப்பு மையத்துக்கு வந்து, அங்கிருந்து விடைத்தாள் திருத்தும் மையங்களுக்கு அவை அனுப்பி வைக்கப்படும். திருப்பூர் கல்வி மாவட்டத்தில் விகாஸ் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தாராபுரம் கல்வி மாவட்டத்தில் பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி ஆகிய இரு மையங்களில் விடைத்தாள் திருத்தப்பட உள்ளது. முதன்மை தேர்வாளர், கூர்ந்தாய்வாளர் பணியை தொடர்ந்து, விடைத்தாள் திருத்தும் அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியை துவங்குவர்.

மாவட்ட தேர்வுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'தேர்வுத்துறை இயக்குனரகத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றி, விடைத்தாள் திருத்தும் பணி துவங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

ஒரிரு நாட்களில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் முதுகலை ஆசிரியர் உட்பட அலுவலர்களுக்கான பணி ஒதுக்கீடு செய்யப்படும்,' என்றனர்.

ஏப்., 1ம் தேதி முதல் பிளஸ் 1 விடைத்தாள் திருத்தும் பணி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us