/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பேரூர் அடிகளார் நுாற்றாண்டு விழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி பேரூர் அடிகளார் நுாற்றாண்டு விழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
பேரூர் அடிகளார் நுாற்றாண்டு விழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
பேரூர் அடிகளார் நுாற்றாண்டு விழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
பேரூர் அடிகளார் நுாற்றாண்டு விழா திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி
ADDED : மார் 22, 2025 11:03 PM

அவிநாசி: பேரூர் சாந்தலிங்க ராமசாமி அடிகளார் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, 75வது திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி ஸ்ரீ கருணாம்பிகை உடனமர் அவிநாசி லிங்கேஸ் வரர் கோவிலில் உள்ள கருணாம்பிகை கலையரங்கத்தில் நடைபெற்றது.
கோவை பேரூராதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமை வகித்து ஆசியுரை வழங்கினார். கோவை, அவிநாசி, திருப்பூர் உள்ளிட்ட ஊர்களில் இருந்து வந்திருந்த நுாற்றுக்கும் மேற்பட்ட சிவனடியார்கள் கலந்து கொண்டு திருவாசகம் முற்றோதல் செய்தனர்.
கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார், அறங்காவலர் பொன்னுசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். திருக்கோவில் பக்தர்கள் பொது நலச்சங்கம் மற்றும் பேரூராதினம் திருவாசகம் முற்றோதல் குழு ஆகியன இணைந்து நிகழ்ச்சிக்கான ஏற்பாடு செய்திருந்தனர்.