/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் வழங்கல்
ADDED : மார் 22, 2025 11:03 PM

திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பு மற்றும் லகு உத்யோக் பாரதி சார்பில், 34 மாற்றுத்திறனாளி களுக்கு செயற்கை கால் மற்றும் ஊன்று கோல் வழங்கப்பட்டது.
திருப்பூர் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நேற்று முன்தினம் நடந்த விழாவுக்கு, சக் ஷம் மாவட்ட தலைவர் ரத்தினசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தமிழ்செல்வம், லகு உத்யோக் பாரதியின் மாவட்ட தலைவர் பால கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். தேசிய இணை பொது செயலாளர் மோகன சுந்தரம், மாநில துணை தலைவர் திருநாவுக் கரசு, ஹார்வி மண்டப அறக்கட்டளை தலைவர் கிருஷ்ணகுமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்களை வழங்கினர்.
மொத்தம், 34 பயனாளிகளுக்கான செயற்கை கால்கள் மற்றும் ஊன்றுகோல் ஆகிய, 1.96 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை, திருப்பூர் மாவட்ட லகு உத்யோக் பாரதி உறுப்பினர்கள் வழங்கினர். நிகழ்ச்சியில், பழனிசாமி - பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் கோவிந்தராஜ், சக் ஷம் மற்றும் லகு உத்யோக் பாரதி அமைப்பு நிர்வாகிகள் பங்கேற்றனர்.