/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பழுதடைந்துள்ள ரோடு சீரமைக்க அதிகாரி உறுதி பழுதடைந்துள்ள ரோடு சீரமைக்க அதிகாரி உறுதி
பழுதடைந்துள்ள ரோடு சீரமைக்க அதிகாரி உறுதி
பழுதடைந்துள்ள ரோடு சீரமைக்க அதிகாரி உறுதி
பழுதடைந்துள்ள ரோடு சீரமைக்க அதிகாரி உறுதி
ADDED : மார் 21, 2025 01:58 AM
திருப்பூர்: திருப்பூர், 16 வது வார்டில் பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்ட ரோட்டை சீரமைக்க வேண்டும் என மண்டல தலைவரிடம் கவுன்சிலர் வலியுறுத்தி உள்ளார்.
திருப்பூர் மாநகராட்சி, 1வது வார்டில் பிச்சம் பாளையம் புதுார், கேத்தம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களது குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கான்கிரீட் ரோடுகள் பாதாள சாக்கடை, நான்காவது குடிநீர் திட்ட குழாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தோண்டப்பட்டது. கடந்த, மூன்று ஆண்டுகளாக ரோடு சீரமைக்கப்படாமல் பல இடங்கள் குண்டும் குழியுமாக உள்ளது.
இதுதொடர்பாக வார்டு கவுன்சிலர் தமிழ்செல்வி மாநகராட்சி கூட்டத்தில் வலியுறுத்தி வந்தார். நடவடிக்கை எடுக்கப்படாமல் இருந்தது.
இச்சூழலில், கவுன்சிலர் தமிழ்செல்வி தலைமையில் பொதுமக்களுடன் மேயரை சந்தித்து மனு அளிக்க இருந்தனர். இதையறிந்த மண்டல தலைவர் கோவிந்தராஜ் மக்களை சந்தித்தார். சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, விரைந்து ரோட்டை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.