/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டம்
ADDED : மார் 21, 2025 01:58 AM
திருப்பூர்: தமிழக சட்டசபையில் 'டாஸ்மாக்' ஊழல் குறித்து பேச அனுமதிக்க வேண்டும் என, பா.ஜ.,வினர் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'டாஸ்மாக்' ஊழல் குறித்து பா.ஜ., வினர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது, இதுதொடர்பாக சட்டசபையில் எழுப்ப கூடிய கேள்விகளுக்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.
இதற்கு விளக்கம் அளிப்பதுடன், வரும் காலங்களில் இதுபோன்றவற்றை ஏற்படாமல் முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வினர் திருப்பூர் தலைமை தபால் நிலையத்தில் முதல்வருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட தபால்களை பா.ஜ.,வினர் முதல்வருக்கு அனுப்பினர்.