/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தேசிய டேபிள் டென்னிஸ் பூமலூர் ஆசிரியர் தேர்வு தேசிய டேபிள் டென்னிஸ் பூமலூர் ஆசிரியர் தேர்வு
தேசிய டேபிள் டென்னிஸ் பூமலூர் ஆசிரியர் தேர்வு
தேசிய டேபிள் டென்னிஸ் பூமலூர் ஆசிரியர் தேர்வு
தேசிய டேபிள் டென்னிஸ் பூமலூர் ஆசிரியர் தேர்வு
ADDED : மார் 21, 2025 01:57 AM

பல்லடம்,: அரசு பணியாளர்களுக்கு இடையே நடக்கும் தேசிய அளவிலான டேபிள் டென்னிஸ் போட்டிக்கு, பூமலுார் அரசுப்பள்ளி ஆசிரியர் தேர்வானார்.
டில்லியில், தேசிய அளவிலான, அரசு பணியாளர்களுக்கு இடையிலான டேபிள் டென்னிஸ் போட்டி நடக்கிறது. இதில், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, அரசு பணியாளர்கள் போட்டிகளில் பங்கேற்கின்றனர். தமிழக அரசு பணியாளர் டேபிள் டென்னிஸ் அணிக்கான தேர்வு சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில், பொதுப் பிரிவு மற்றும் 40 வயதுக்கும் மேற்பட்ட வீரர்கள் என, இரண்டு பிரிவுகளாக வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்த அணியில், தமிழக அரசு தலைமைச் செயலக ஊழியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியை உட்பட, 7 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
அணியில் பல்லடம், பூமலுார் அரசு உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் செல்வகுமாரும் இடம்பெற்றுள்ளார். தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்கும் தமிழக அணி வீரர்களுக்கு, அரசுப் பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.