/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அமராவதிநகர் சைனிக் பள்ளியில் என்.சி.சி. டி.ஜி. ஆய்வு அமராவதிநகர் சைனிக் பள்ளியில் என்.சி.சி. டி.ஜி. ஆய்வு
அமராவதிநகர் சைனிக் பள்ளியில் என்.சி.சி. டி.ஜி. ஆய்வு
அமராவதிநகர் சைனிக் பள்ளியில் என்.சி.சி. டி.ஜி. ஆய்வு
அமராவதிநகர் சைனிக் பள்ளியில் என்.சி.சி. டி.ஜி. ஆய்வு
ADDED : செப் 02, 2025 08:09 PM

உடுமலை; உடுமலை அமராவதிநகர் சைனிக் பள்ளியில், தேசிய மாணவர் படை டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால்சிங் பார்வையிட்டார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி நகரில், தேசிய பாதுகாப்பு படையின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
இப்பள்ளியினை தேசிய மாணவர் படையின் டைரக்டர் ஜெனரல் லெப்டினன்ட் ஜெனரல் குர்பிர்பால்சிங் பார்வையிட்டார். அவருக்கு மாணவர்களின் துப்பாக்கி அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாணவர்களை இந்திய ஆயதப்படைகளில் மாணவர்கள் சேர்வதற்கு ஊக்குவித்தார். மாணவர்களுடன் அவர் பேசியதாவது: தார்மீக மதிப்புகள், நேர்மை, சுய ஒழுக்கம் மற்றும் ஒருபோதும் விட்டுக்கொடுக்காத மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தேசிய மாணவர் படையில், இருபால் மாணவ மாணவியருக்கும் சம வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.
இதை பயன்படுத்தி அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும். இவ்வாறு பேசினார்.
தொடர்ந்து மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவருடன் கேரளா மற்றும் லட்சத்தீவு என்.சி.சி., இயக்குனரக கூடுதல் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஜெனரல் ரமேஷ்சண்முகம், தமிழகம், புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் என்.சி.சி., துணை டைரக்டர் ஜெனரல் கமாடோர் ராகவ் உள்ளிட்டோர் உடன் பள்ளியை பார்வையிட்டனர். மாணவர்களுடன் கலந்துரையாடினர். இந்நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியர்கள், நிர்வாகத்தினர் பங்கேற்றனர்.