ADDED : செப் 02, 2025 08:07 PM
உடுமலை; உடுமலை புதிய பஸ் ஸ்டாண்டில், பழநி மற்றும் பொள்ளாச்சி மார்க்கமாக செல்லும் புறநகர் பஸ்களும், கிழக்கு நோக்கி செல்லும் டவுன்பஸ்கள் நின்று பயணியரை ஏற்றி இறக்கிச்செல்கின்றன.
ஆனால், அங்கு பயணியருக்கு தேவையான இருக்கை வசதிகள் இல்லை. இதனால், மக்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. எனவே, அங்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.