/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ திருப்பூரில் 'மெத்தபெட்டமைன்' புழக்கம் திருப்பூரில் 'மெத்தபெட்டமைன்' புழக்கம்
திருப்பூரில் 'மெத்தபெட்டமைன்' புழக்கம்
திருப்பூரில் 'மெத்தபெட்டமைன்' புழக்கம்
திருப்பூரில் 'மெத்தபெட்டமைன்' புழக்கம்
ADDED : மார் 22, 2025 11:00 PM

திருப்பூர்: திருப்பூரில் சில நாட்களாக போலீசார் சோதனையில் மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் சிக்கி வருகிறது.
நகரில் இதன் புழக்கம் தொடர்பாக, ஓட்டல்களில் சந்தேகப்படும் வகையில் குழுவாக அறையெடுத்து தங்குபவர்களை தனிப்படையினர் கண்காணிக்கின்றனர்.
கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்த, விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
தனிப்படை போலீசார் அன்றாடம் ஓட்டல், லாட்ஜ்களை சோதனை செய்து, கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை பொருட்களை வைத்திருந்தவர்களை பிடித்து வருகின்றனர்.
சோதனைகளில் கஞ்சா ஒரு புறம் சிக்கி வந்தாலும், சமீப நாட்களில், குழுவாக ஓட்டலில் அறை எடுத்து தங்கியுள்ள வாலிபர்களிடம் இருந்து மெத்த பெட்டமைன், ஹெராயின் போன்ற போதை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.
வலி நிவாரண மாத்திரைகளை, போதைக்காக ஊசிகளில் ஏற்றி கொள்பவர்கள், மாத்திரைகளை கூரியரில் வெளி மாநிலங்களில் இருந்து வாங்குபவர்கள் சிக்கி வருகின்றனர்.
போதை பொருட்கள் பறிமுதல் காரணமாக ஓட்டல்களில் குழுவாக அறையெடுத்து சந்தேகப்படும் வகையில்தங்குபவர்களிடம் தனிப்படையினர் விசாரிக்கின்றனர்.
13 பேர் சிக்கினர்
l பிப்., 1ல், பி.என்,, ரோடு புஷ்பா சந்திப்பு அருகே உள்ள ஓட்டல் ஒன்றில் தனிப்படை போலீசார் சோதனை செய்த போது, மதுரையை சேர்ந்த அசோக், 32 உட்பட, ஏழு பேரை கைது செய்து, 40 ஊசிகள் மற்றும் 9.5 கிராம் மெத்தபெட்டமைன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அசோக் என்பவர் 'பேஸ்புக்' மூலம் மற்றவர்களுக்கு அறிமுகமாகி பழக்கம் ஏற்பட்டது தெரிந்தது. கேரளா நண்பர் மூலமாக பெங்களூரில் இருந்து ஒரு கிராம், 8 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி வந்தது தெரிந்தது.
l பிப்., 20ல், கேரளா எக்ஸ்பிரஸ் ரயிலை கண்காணித்த தனிப்படை போலீசார், அதிலிருந்து வந்த பீஹாரை சேர்ந்த விகாஷ்குமார், 21 மற்றும் அபிஷேக்குமார், 24 என, இருவரிடம் விசாரித்தனர். அவர்களிடமிருந்து, 3.6 கிராம் ஹெராயின் பிடிபட்டது.
l நேற்று முன்தினம், புஷ்பா சந்திப்பில் உள்ள ஓட்டலில் தனிப்படையினர் சோதனை செய்த போது, திருப்பூர் தட்டான்தோட்டத்தை சேர்ந்த விவேக், 39 உட்பட, நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 1.18 கிராம் மெத்தபெட்டமைனை பறிமுதல் செய்தனர்.
நேபாலை சேர்ந்த விவேக், கடந்த, 20 ஆண்டு முன்பு, குடும்பத்துடன் குடியேறினர். தற்போது பனியன் நிறுவனம் நடத்தி வருகிறார். தனது, இரு நண்பர்களுடன், 'ஆன்லைன் ஆப்' மூலமாக பழக்கமான நண்பரையும் அழைத்து, அறை எடுத்து தங்கி பயன்படுத்தியது தெரிந்தது. இதனை, பெங்களூரில் இருந்து நைஜீரியாவைச் சேர்ந்த ஒருவரிடம் வாங்கி வந்தது தெரிந்தது.
புழக்கம் அதிகரிப்பா...
இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் தொடர்பாக ரயில், ஓட்டல்களில் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இதுதவிர சமீபத்தில் சோதனையில் சிக்கும் மெத்தபெட்டமைன், ஹெராயின் போன்ற உயர்தர போதை பொருட்கள் புழக்கம் நகரில் ஏதாவது இருந்து வருகிறதா, கைது செய்யப்படுவர்களின் பின்புலம், அவர்களுக்கு எப்படி கிடைக்கிறது என அனைத்தும் கண்காணிக்கப்படுகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.