/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேக விழா
ADDED : மே 23, 2025 11:57 PM

அவிநாசி : அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலின் குழுக்கோவிலான ஸ்ரீ காசி விநாயகர் கோவிலில், திருப்பணிகள் நிறைவுற்று, 21ம் தேதி விநாயகர் வழிபாடு, வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜைக்கு பின், மூலவர் விமானம் மற்றும் ஸ்ரீ காசி விநாயகர் பெருமானுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிேஷக சர்வசாதக பூஜைகளை அவிநாசி கோவில் சிவக்குமார சிவம் மேற்கொண்டார். விழாவில், கோவில் தக்கார் சபரீஷ்குமார், அவிநாசி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சக்திவேல், அறங்காவலர்கள் பொன்னுசாமி, விஜயகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். கிழக்கு ரத வீதி நகராட்சி வணிக வளாக நண்பர்கள் குழு சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.