/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக சிகிச்சை முகாம் ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக சிகிச்சை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக சிகிச்சை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக சிகிச்சை முகாம்
ரேவதி மெடிக்கல் சென்டரில் சிறுநீரக சிகிச்சை முகாம்
ADDED : ஜூன் 27, 2025 11:39 PM
திருப்பூர்; திருப்பூர் ரேவதி மெடிக்கல் சென்டர் வளாகத்தில் இன்றும், நாளையும் (28 மற்றும் 29ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை சிறுநீரக சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம், சிறுநீரக சிகிச்சை மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் ஹரிஷ் சிவஞானம் தலைமையில் நடக்கிறது.
சர்க்கரை, சிறுநீர், யூரியா, கிரியாட்டினின், எலும்பு அடர்த்தி பரிசோதனைகள், சிறுநீரக மருத்துவரின் ஆலோசனை வழங்கப்படுகிறது. 1690 ரூபாய் மதிப்புள்ள பரிசோதனைகளை இலவசமாக பெறுவதற்கு பதிவுக்கட்டணமாக 200 ரூபாய் செலுத்தினால் போதும்.
ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பிரச்னை, தீவிர சிறுநீரக கோளாறு, இருதயம், கல்லீரல் பிரச்னை உள்ளவர்கள், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுபவர்கள், கை -கால் வீக்கம் உள்ளவர்கள், தங்கள் சிறுநீரகச் செயல்பாட்டை அறிய விரும்புவோர் பங்கேற்று பயன்பெறலாம். தொடர்புக்கு: 98422 09999, 98422 11116.
இத்தகவலை ரேவதி மெடிக்கல் சென்டர் தலைவர் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்துள்ளார்.