/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு ரூ.3.6 கோடியில் 5 நிலை ராஜ கோபுரம் கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு ரூ.3.6 கோடியில் 5 நிலை ராஜ கோபுரம்
கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு ரூ.3.6 கோடியில் 5 நிலை ராஜ கோபுரம்
கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு ரூ.3.6 கோடியில் 5 நிலை ராஜ கோபுரம்
கொண்டத்துக்காளியம்மன் கோவிலுக்கு ரூ.3.6 கோடியில் 5 நிலை ராஜ கோபுரம்
ADDED : ஜூன் 27, 2025 11:38 PM

பெருமாநல்லுார்; பெருமாநல்லுாரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. பழமையான இக்கோவிலை புணரமைப்பு செய்து, கும்பாபிேஷகம் செய்ய வேண்டுமென, பக்தர்கள் அறநிலையத்துறைக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையொட்டி, 3.60 கோடி ரூபாய் மதிப்பில் ஐந்து நிலை ராஜ கோபுரம், 6.34 கோடி ரூபாய் மதிப்பில் திருமாளிகை பக்தி மண்டபம், 2.42 கோடி ரூபாய் மதிப்பில் வசந்த மண்டபம், உள்ளிட்டவை உபய தாரர்கள் மற்றும் பக்தர்கள் வாயிலாக திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
முதல் கட்டமாக 66 அடி உயரத்தில், 43க்கு 23 அடி அகலம் கொண்ட ஐந்து நிலை ராஜ கோபுரம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதற்கான கால்கோள் விழா நேற்று காலை நடைபெற்றது.
எம்.எல்.ஏ., விஜயகுமார், மேயர் தினேஷ்குமார், அறநிலையத்துறை சரக ஆய்வாளர் தினேஷ், செயல் அலுவலர் சங்கர சுந்தரேஸ்வரன் மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்.
திருப்பூர் கம்பன் கழக செயலாளர் ராமகிருஷ்ணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ராஜ கோபுரத்தை தொடர்ந்து, வசந்த மண்ட பம் உள்ளிட்ட அடுத்தடுத்து பணியை உபயதாரர்கள் வாயிலாக நடைபெறுவதாக கோவில் நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.