/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கொங்கு வேளாளர் பள்ளியில் போதை விழிப்புணர்வு வாரம் கொங்கு வேளாளர் பள்ளியில் போதை விழிப்புணர்வு வாரம்
கொங்கு வேளாளர் பள்ளியில் போதை விழிப்புணர்வு வாரம்
கொங்கு வேளாளர் பள்ளியில் போதை விழிப்புணர்வு வாரம்
கொங்கு வேளாளர் பள்ளியில் போதை விழிப்புணர்வு வாரம்
ADDED : ஜூன் 27, 2025 11:40 PM

திருப்பூர்; திருப்பூர் - அங்கேரிபாளையம் ரோட்டில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்பட்டது.
மாணவ, மாணவியருக்கான பேச்சு, கட்டுரை, வாசகங்கள் எழுதும் போட்டிகள் நடந்தன. அனுப்பர்பாளையம் எஸ்.ஐ., ராமசாமி, தலைமைக்காவலர் இன்பா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதன் தீமைகள்; விளைவுகள், பெண் குழந்தைகளுக்கு பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விழிப்புணர்வு, போக்சோ சட்டம் ஆகியன குறித்து பேசினர்.
பள்ளி முதல்வர் சுமதி, செயலாளர் கீதாஞ்சலி கோவிந்தப்பன் ஆகியோர் பங்கேற்றனர். துணை முதல்வர் கோமதி வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் கலைச்செல்வி நன்றி கூறினார்.