/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/சிக்கண்ணா கல்லுாரியில் கார்கில் வெற்றி தினம் சிக்கண்ணா கல்லுாரியில் கார்கில் வெற்றி தினம்
சிக்கண்ணா கல்லுாரியில் கார்கில் வெற்றி தினம்
சிக்கண்ணா கல்லுாரியில் கார்கில் வெற்றி தினம்
சிக்கண்ணா கல்லுாரியில் கார்கில் வெற்றி தினம்
ADDED : ஜூலை 26, 2024 11:43 PM

திருப்பூர்;திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்ட அலகு -- 2, காந்தி நகர் ரோட்டரி சங்கம் சார்பில், கார்கில் வெற்றி தினம், வீரமரணம் அடைந்த நம் ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். ரோட்டரி சங்க தலைவர் உமாகாந்த் முன்னிலை வகித்தார். என்.எஸ்.எஸ்., திட்டம் அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வரவேற்றார். தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் ராஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
ரோட்டரி சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆனந்தராம், ரவீந்திரன், ரோட்டரி உதவி கவர்னர் சிவபாலன், திட்ட அலுவலர் கிருபானந்தம் மற்றும் பலர் பங்கேற்றனர். கல்லுாரி மாணவ செயலர்கள் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, தாமோதரன், நவீன்குமார் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் நம் ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தினர். ரோட்டரி சங்க செயலாளர் மணிமாறன் நன்றி கூறினார்.
----
சிக்கண்ணா கல்லுாரியில் நடந்த கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய மாணவியர்.