/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயணி எண்ணிக்கை அதிகரிப்பு பரூனிக்கு மீண்டும் சிறப்பு ரயில் பயணி எண்ணிக்கை அதிகரிப்பு பரூனிக்கு மீண்டும் சிறப்பு ரயில்
பயணி எண்ணிக்கை அதிகரிப்பு பரூனிக்கு மீண்டும் சிறப்பு ரயில்
பயணி எண்ணிக்கை அதிகரிப்பு பரூனிக்கு மீண்டும் சிறப்பு ரயில்
பயணி எண்ணிக்கை அதிகரிப்பு பரூனிக்கு மீண்டும் சிறப்பு ரயில்
ADDED : ஜூலை 26, 2024 11:44 PM
திருப்பூர்;பீகார் மாநிலத்தவர், பலர் தமிழகத்துக்கு ரயிலில் வந்து செல்கின்றனர். பிற மாநிலங்களை விட இம்மாநிலத்தவர் அதிகளவில் ரயிலில் பயணிப்பதால், ஒவ்வொரு வாரமும் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. கடந்த வாரம் இயக்கிய ரயிலுக்கு பயணிகள் மத்தியில் வரவேற்பு அதிகரித்த நிலையில், நடப்பு வாரம் முதல் ஆக., 10 வரை ரயில் இயக்கப்பட உள்ளது.
அவ்வகையில், இன்றும், ஆக., 3 மற்றும், 10ம் தேதி (சனிக்கிழமை) கொச்சுவேலியில் இருந்து காலை, 8:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06091) திங்கள் மதியம், 2:30 மணிக்கு பரூனி சென்றடையும். மறுமார்க்கமாக செவ்வாய் தோறும் இரவு, 11:30 மணிக்கு பரூனியில் புறப்பட்டு, வெள்ளி மதியம், 1:30 மணிக்கு கொச்சுவேலி வந்தடையும்.
இந்த ரயிலில், 11 முன்பதிவில்லா பொது பெட்டிகளும், ஒன்பது முன்பதிவு பெட்டியும் இருக்கும். பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஸ்டேஷன்களில் நின்று செல்லும். சிறப்பு ரயில் அந்தந்த ஸ்டேஷன்களுக்கு வரும் நிலவரத்தை ஸ்டேஷன்களில் உள்ள தகவல் மையத்தில் பயணிகள் அறிந்து கொள்ளலாம், என சேலம் கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது.