/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் செயல்பாடு துவக்கம் வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் செயல்பாடு துவக்கம்
வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் செயல்பாடு துவக்கம்
வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் செயல்பாடு துவக்கம்
வஞ்சிபாளையம் கூட்ஸ்ஷெட் செயல்பாடு துவக்கம்
ADDED : ஜூலை 26, 2024 11:42 PM

திருப்பூர்;திருப்பூருக்கு மாற்றாக, வஞ்சிபாளையத்தில் கூட்ஸ்ஷெட் அமைக்கும் பணியை, கடந்த 2019ல் தெற்கு ரயில்வே துவக்கியது.
பிளாட்பார்ம் விரிவுபடுத்துவது, கான்கிரீட் சிமென்ட் தளம் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணி துவங்காமல் இழுபறியாக இருந்து வந்தது. ஐந்து ஆண்டுகளுக்கு பின், நடப்பாண்டு துவக்கத்தில், 16 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு, கூட்ஸ்ெஷட் அமைக்கும் பணி, சுறுசுறுப்பாகியது.
சேலம் கோட்ட வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
வணிகர்களின் வசதிக்காக, வஞ்சிபாளையத்தில் புதிய கூட்ஸ்ஷெட் உருவாக்கப்பட்டுள்ளது. சரக்கு 'வேகன்' நிற்க ஏதுவாக, பிளாட்பார்ம் நீளம், 528 மீட்டரில் இருந்து, 718 மீட்டராகவும், கூடுதல் பிளாட்பார்ம் நீளம், 789 மீட்டராகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இனி, 42 'வேகன்' ரயில் நிற்க முடியும்.
திருப்பூர் கூட்ஸ்ஷெட் நகரின் நெரிசல் மிகுந்த பகுதியாக இருப்பதாக கருதுவோர், சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அருகாமையில் உள்ள வஞ்சிபாளையம் கூட்ஸ்ெஷட்டில் சரக்கு முன்பதிவு செய்யலாம். காலை 6:00 முதல் இரவு, 10:00 மணி வரை கூட்ஸ்ெஷட் செயல்படும்.
திருப்பூருக்கு மாற்றாக வஞ்சிபாளையத்தில் கூட்ஸ்ஷெட் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், புதிய கூட்ஸ்ஷெட்டில் முன்பதிவு செய்யும் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்கு 'டெர்மினல்' கட்டணத்தில், டன்னுக்கு, 20 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.
திருப்பூரை போன்றே கோதுமை, மக்காச்சோளம், எண்ணெய் புண்ணாக்கு, நெல், சிமென்ட் போன்ற பொருட்கள் கையாளப்படுகிறது. கோழி, மாட்டுத் தீவனம் பதப்படுத்தும் அலகு, உருளை மாவு, அரிசி ஆலை, உணவு பதப்படுத்தும் அலகு உள்ளிட்ட பிற தொழில் சார்ந்தவர்களும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினர்.