/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ரூ.30.60 கோடியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழாரூ.30.60 கோடியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா
ரூ.30.60 கோடியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா
ரூ.30.60 கோடியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா
ரூ.30.60 கோடியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் திறப்பு விழா
ADDED : ஜன 05, 2024 11:46 PM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியில் மேம்படுத்திய புதிய பஸ் ஸ்டாண்ட் மற்றும் வணிக வளாகம் உள்ளிட்ட பல்வேறு முடிவுற்ற கட்டடங்களை, காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில், பி.என்.ரோடு புதிய பஸ் ஸ்டாண்ட் வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 கடைகள் அமைந்த வணிக வளாகம், வாகன பார்க்கிங் வளாகம்; கண்காணிப்பு கேமராக்கள், லிப்ட், எஸ்கலேட்டர் வசதி, கழிப்பிடங்கள் உட்பட வசதிகளுடன் 30.60 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வளாகத்தை சென்னை தலைமை செயலகத்திலிருந்து கணொலி காட்சி வாயிலாக நேற்று முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். புதிய பஸ் ஸ்டாண்ட் வளாத்தில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, மேயர் தினேஷ்குமார், எம்.எல்.ஏ., செல்வராஜ், துணை மேயர் பாலசுப்ரமணியம், கலெக்டர் கிறிஸ்துராஜ், கமிஷனர் பவன்குமார், சப்-கலெக்டர் சவுமியா ஆனந்த் பங்கேற்றனர்.
இதே நிகழ்ச்சியில், நஞ்சப்பா பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அறிவுசார் மையம், பல்வேறு வார்டுகளில் கட்டியுள்ள நல வாழ்வு மையங்கள், முருகம்பாளையம் நான்காவது மண்டல அலுவலகம், மூங்கில் பூங்கா ஆகியனவும் திறந்து வைக்கப்பட்டது.