/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/முறைகேடாக மின் பயன்பாடு; ரூ.48 லட்சம் அபராதம் விதிப்புமுறைகேடாக மின் பயன்பாடு; ரூ.48 லட்சம் அபராதம் விதிப்பு
முறைகேடாக மின் பயன்பாடு; ரூ.48 லட்சம் அபராதம் விதிப்பு
முறைகேடாக மின் பயன்பாடு; ரூ.48 லட்சம் அபராதம் விதிப்பு
முறைகேடாக மின் பயன்பாடு; ரூ.48 லட்சம் அபராதம் விதிப்பு
ADDED : ஜன 11, 2024 07:07 AM
பல்லடம் : பல்லடம் அருகே உள்ள ஒரு சைசிங் நிறுவனம் கடந்த சில நாட்களாக, இரவு நேரங்களில், முறைகேடாக மின்சாரத்தை எடுத்து தனது நிறுவனத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளது.
இது குறித்து, மின்வாரிய பறக்கும் படை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வந்த நிலையில், முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தி வந்தது கண்டறியப்பட்டது. இதனால், சைசிங் உரிமையாளருக்கு, 48 லட்சம் ரூபாய் பில் தொகை செலுத்த மின்வாரிய அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
இது குறித்து செயற்பொறியாளர் பழனிசாமி கூறுகையில், 'முறைகேடாக மின்சாரம் பயன்படுத்தியது சம்பந்தப்பட்ட உரிமையாளரே ஒப்புக்கொண்டார்.
அதற்காக, 48 லட்சம் ரூபாய் தொகையை செலுத்த, இரண்டு வாரம் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது,' என்றார்.