இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி
இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி
இந்தியா வருகின்றனர் அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி
ADDED : மார் 12, 2025 10:01 AM

வாஷிங்டன்: அமெரிக்கா துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி இந்தியாவில் சுற்றுப்பயணம் வர திட்டமிட்டுள்ளனர்.
அமெரிக்கா துணை அதிபராக ஜே.டி.வேன்ஸ், 40, பதவி ஏற்றதை தொடர்ந்து அவரது மனைவி உஷா வேன்ஸ் அமெரிக்காவின் இரண்டாவது பெண்மணி ஆகியுள்ளார். உஷா வேன்ஸ், பெற்றோர் ஆந்திராவை பூர்வீகமாக கொண்டவர்கள்.
2014ம் ஆண்டில் ஜே.டி.வேன்சை கரம் பிடித்த உஷாவுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் இந்தியாவின் மருமகன் என்பதால் இந்தியர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு இருக்கிறது.
இந்நிலையில், துணை அதிபர் வேன்ஸ், உஷா தம்பதி இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளனர். இவர்களது இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அவர்கள் வருகைக்கான தேதி குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
சமீபத்தில் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனிக்கு வேன்ஸ் மேற்கொண்ட பயணங்களுக்கு பிறகு, இரண்டாவது அரசு முறை சர்வதேச பயணம் இதுவாகும்.