/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ காட்சிப்பொருளாக இ-சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாதிப்பு காட்சிப்பொருளாக இ-சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாதிப்பு
காட்சிப்பொருளாக இ-சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாதிப்பு
காட்சிப்பொருளாக இ-சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாதிப்பு
காட்சிப்பொருளாக இ-சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வராமல் பாதிப்பு
ADDED : ஜூன் 06, 2025 10:55 PM
உடுமலை, ; கிராமங்களில் காட்சிப்பொருளாக உள்ள இ-சேவை மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்து, கட்டடங்களை பாதுகாக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தமிழக அரசு, பல்வேறு அரசுத்துறை சார்ந்த நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல் ஆகிய நடைமுறைகளை ஆன்லைன் முறைக்கு மாற்றியுள்ளது.
எனவே, கிராம மக்கள், வருவாய்த்துறை சான்றிதழ்கள், வேளாண்துறை மானியத்திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்க, அருகிலுள்ள நகரங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது.
தாலுகா அலுவலகங்களில் உள்ள இ-சேவை மையங்களில், கட்டமைப்பு வசதிகள் குறைவு உட்பட காரணங்கள் தெரிவிக்கப்பட்டு, குறைவான நபர்களுக்கு மட்டுமே சேவைகள் அளிக்கப்படுகிறது.
கிராமப்புற மக்களுக்கான இ-சேவையை அதிகரிக்க, மத்திய அரசு சிறப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, கிராமந்தோறும், கிராம சேவை மைய கட்டடங்கள் கட்டப்பட்டன.
இந்த மையத்தில், அரசுத்துறை சார்ந்த திட்டங்களுக்கு விண்ணப்பித்தல், கட்டணம் செலுத்துதல், வேலை உறுதியளிப்பு திட்ட பயனாளிகளுக்கான சேவைகள் உள்ளிட்ட சேவைகளும் மக்களுக்கு வழங்கப்படும் என திட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சேவை மைய கட்டடத்துக்கு, வேலை உறுதியளிப்பு திட்டத்தில், தலா, 14 லட்ச ரூபாய், நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. கட்டட பணிகள் நிறைவு பெற்று பல ஆண்டுகளாகியும், பெரும்பாலான கிராம சேவை மையங்கள் பயன்பாட்டுக்கு வரவில்லை.
கம்ப்யூட்டர் உட்பட உபகரணங்கள் ஒதுக்கீடு செய்யாதது; ஆட்கள் நியமனம் உட்பட பிரச்னைகளால், கிராம சேவை மையங்களை முழுமையாக பயன்பாட்டுக்கு வரவில்லை.
இதனால், சேவை மைய கட்டடங்கள் பரிதாப நிலைக்கு மாறி வருகின்றன; மக்களும் நகரங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டு, வேதனைக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, கிராம சேவை மைய கட்டடங்களை பயன்பாட்டுக்கு திறந்து, அனைத்து வகை சேவைகளும் மக்களுக்கு கிடைக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.