/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கறவை மாடுகள் பராமரிப்பு கல்லுாரியில் கருத்தரங்கம் கறவை மாடுகள் பராமரிப்பு கல்லுாரியில் கருத்தரங்கம்
கறவை மாடுகள் பராமரிப்பு கல்லுாரியில் கருத்தரங்கம்
கறவை மாடுகள் பராமரிப்பு கல்லுாரியில் கருத்தரங்கம்
கறவை மாடுகள் பராமரிப்பு கல்லுாரியில் கருத்தரங்கம்
ADDED : ஜூன் 06, 2025 10:58 PM

உடுமலை; உடுமலை கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், கறவை மாடுகளின் மடி வீக்க நோய்க்கான மரபுசார் மூலிகை மருத்துவ மேலாண்மை குறித்த கருத்தரங்கம் நடந்தது.
கல்லுாரி முதல்வர் மணிவண்ணன் தலைமை வகித்தார். இதில், கறவை மாடுகளில் மடிநோய் மேலாண்மையில் உள்ள புதிய தொழில்நுட்பங்கள் குறிப்பாக மிதமடி நோய் வரும் முன் கண்டறிய உதவும் 'கிட்' வராமல் தடுக்க உதவும் 'டீட் ப்ரொடெக்ட்', குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
தொடர்ந்து, மடிநோய்க்கான மரபுசார் மூலிகை மருத்துவ மேலாண்மை குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
திருப்பூர் மாவட்ட ஆவின் நிறுவன கொள்முதல் பிரிவு மேலாளர் அப்துல் லதீப், பொள்ளாச்சி கோட்ட கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் சக்ளாபாபு உள்ளிட்டோர் பேசினர்.
கால்நடை மருத்துவயியல் துறை இணை பேராசிரியர் செந்தில்குமார் அறிக்கை சமர்ப்பித்தார். பால் உற்பத்தியாளர்கள் பங்கேற்றனர்.