Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்

குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்

குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்

குறைதீர் கூட்டம் தாமதம்; விவசாயிகள் வாக்குவாதம்

ADDED : ஜூன் 25, 2025 11:58 PM


Google News
Latest Tamil News
திருப்பூர்; கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், வருவாய் கோட்டாட்சியர் அலுவலக அரங்கில், ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது. இதில் விவசாயிகள் தங்கள் குறைகளை முறையிட்டனர். மனுக்களையும் வழங்கினர்.

அடையாள அட்டைஅணியாத அலுவலர்கள்


கிருஷ்ணசாமி, தலைவர், நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கம்:

ஆர்.டி.ஓ., உட்பட அரசு அலுவலர்கள் யாரும் அடையாள அட்டை அணிவதில்லை. விதிமுறைப்படி, அனைத்து அதிகாரிகள், அலுவலர்களும் அடையாள அட்டை அணியவேண்டும். விவசாயிகள் அளிக்கும் மனுக்களுக்கு உரிய காலத்தில் தீர்வு காணப்படவேண்டும்.

மண் பாதையால்மக்களுக்கு கஷ்டம்


அப்புசாமி, திருப்பூர் வடக்கு ஒன்றிய செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம்:

பொங்குபாளையம் ஊராட்சி, பரமசிவம் பாளையத்திலிருந்து, கருப்பராயன் கோவில் வழியாக, அவிநாசி ஒன்றியம், பச்சாபாளையம் செல்லும் ரோடு உள்ளது. மண் பாதையாக உள்ளதால், மழைக்காலங்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

தினமும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்துவதாலும், கிராமங்களை தேசிய நெடுஞ்சாலையோடு இணைக்கும் முக்கிய பாதையாகவும் உள்ளது. இந்த பாதையில், தார் ரோடு வேண்டும் என பலமுறை மனு அளித்தும் பயனில்லை. போக்கு வரத்து சிரமங்களை தவிர்க்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கலெக்டரை சந்திக்கசென்ற ஆர்.டி.ஓ.,


கடந்த இரண்டு மாதங்களாக, திருப்பூர் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறவில்லை. கூட்ட அரங்க சீரமைப்பு பணிகள் முடிந்ததால், இம்மாதம் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள், காலை, 10:00 மணி முதலே, மனுக்களை பதிவு செய்துவிட்டு, கூட்ட அரங்கினுள் அமர்ந்தனர். புதிய கலெக்டர் பதவியேற்பு காரணமாக, ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இதனால், கூட்டம் துவங்குவதில் காலதாமதம் ஏற்பட்டது.

கூட்ட அரங்கில்சலசலப்பு


''காலதாமதம் ஏற்பட்டாலும், கட்டாயம் குறைகேட்பு கூட்டம் நடத்த வேண்டும்; ஆர்.டி.ஓ., தலைமையில்தான் கூட்டம் நடைபெற வேண்டும். வேறு யாரும் மனுக்களை பெறக்கூடாது'' என, அலுவலர்களுடன், விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், கூட்ட அரங்கில் சலசலப்பு ஏற்பட்டது. 11:40 மணிக்கு, ஆர்.டி.ஓ., வந்த பின், குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.

மின் வாரிய அலுவலர்கள் வரவழைப்பு


கூட்டத்தில், அரசு அலுவலர்கள் ஒவ்வொருவராக எழுந்து, தங்கள் பெயர் மற்றும் துறை விவரங்களை தெரிவித்தனர். மின்வாரியத்திலிருந்து மட்டும் யாரும் வரவில்லை. 'மின் வாரியம் சார்ந்து ஏராளமான பிரச்னைகள் உள்ளன; அத்துறையினர் ஏன் வரவில்லை' என விவசாயிகள் கேள்வி எழுப்பினர். அலுவலர்கள் தகவல் அளித்ததால், 12:00 மணியளவில் மின்வாரிய அலுவலர்கள், கூட்ட அரங்கிற்கு வந்து சேர்ந்தனர்.

வருவாய்த்துறை அலுவலகங்கள்

ஒருங்கிணைந்த கட்டடம் தேவை

பொன்னுசாமி, தலைவர், மங்கலம் கிராம நீரினை பயன்படுத்தும் பாசன விவசாயிகள் நல சங்கம்:

திருப்பூர் - குமரன் ரோட்டில், 75 ஆண்டு பழமையான கருங்கல், ஓட்டு கட்டடத்தில், வடக்கு தாலுகா அலுவலகம் மற்றும் சார்பு அலுவலகங்கள் செயல்படுகின்றன. ஒரு ஏக்கர் பரப்பளவு இடத்தில், தாலுகா அலுவலகம், சார் நிலை கருவூலம், ஆதார், இ-சேவை மையங்கள் உட்பட பல அலுவலகங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன.

ஓட்டு கட்டடம் என்பதால், மழை காலங்களில் மழைநீர் கசிவு ஏற்பட்டு, அலுவலக பணிகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த பழைய கட்டடத்தை அகற்றிவிட்டு, வருவாய்த்துறை அலுவலகங்கள் ஒருங்கிணைந்து செயல்படும் வகையில் புதிய கட்டடம் கட்டவேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us