/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா; மாணவ, மாணவியர் உற்சாகம் அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா; மாணவ, மாணவியர் உற்சாகம்
அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா; மாணவ, மாணவியர் உற்சாகம்
அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா; மாணவ, மாணவியர் உற்சாகம்
அரசுப் பள்ளி நூற்றாண்டு விழா; மாணவ, மாணவியர் உற்சாகம்
ADDED : மார் 25, 2025 07:01 AM
பொங்கலுார்; பொங்கலுார் அருகேயுள்ள கவுண்டம்பாளையம் அரசு துவக்கப்பள்ளி, 1925ல் துவங்கப்பட்டது. பள்ளி துவங்கி நுாறாண்டு ஆனதை கொண்டாட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், இளைஞர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் முன் வந்தனர்.
அவ்வகையில், நுாற்றாண்டு விழா கொண்டாட்டம் நடந்தது. அதையொட்டி, குழந்தைகளின் கலை நிகழ்ச்சி, கும்மியாட்டம் நடந்தது. பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர், சத்துணவு அமைப்பாளர் ஆகியோரை கவுரவித்து சால்வை அணிவித்தனர். வட்டார கல்வி அலுவலர் பூங்கொடி, அவிநாசிபாளையம் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை, தலைமையாசிரியை ஈஸ்வரி, முன்னாள் தலைமை ஆசிரியை அம்மாக் கண்ணு, முன்னாள் மாணவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.