Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

இலவச சமஸ்கிருத பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்  

ADDED : மார் 25, 2025 07:02 AM


Google News
திருப்பூர்; திருப்பூரில் சமஸ்கிருத பாரதி சார்பில், சமஸ்கிருத பயிற்சி அளிக்கப்பட்டு, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை தேர்வு நடத்தி, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி, சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று முன்தினம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு, கோட்ட ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் தலைமை வகித்தார். சமஸ்கிருத பாரதியின் தென் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் பங்கேற்று, வெற்றி பெற்ற மாணவர்களை வாழ்த்தினார். சமஸ்கிருதம் கற்க வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, சான்றிதழ்கள் வழங்கினார்.

இலவச சமஸ்கிருத பயிற்சி வகுப்பு விரைவில் துவங்க இருப்பதால், பயிற்சி பெற விரும்புவோர், 93632 22184 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பவித்ரா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us