/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள விரைவில் குழு: 'டீமா' அறிவிப்பு புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள விரைவில் குழு: 'டீமா' அறிவிப்பு
புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள விரைவில் குழு: 'டீமா' அறிவிப்பு
புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள விரைவில் குழு: 'டீமா' அறிவிப்பு
புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள விரைவில் குழு: 'டீமா' அறிவிப்பு
ADDED : மார் 25, 2025 07:02 AM
திருப்பூர்; திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்கம் (டீமா) சார்பில், 'புதிய பொருளாதார சூழலுக்கு தயாராகுதல்' என்ற தலைப்பில், தொழில் பயிலரங்கம் நடந்தது.
திருப்பூர், ஆர்.கே., ரெசிடென்சியில் நடந்த பயிலரங்கில், 'இன்ஜெக்ஸ் நாலெஜ்' நிறுவனத்தின் நிர்வாகி சம்பத் காசிராஜன், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். 'டீமா' தலைவர் முத்துரத்தினம் தலைமை வகித்தார்.
சங்க செயலாளர் செந்தில்வேல், சுலோச்சனா மில்ஸ் 'சஸ்டெய்னபிலிட்டி' பிரிவு நிர்வாகி கிரீஷ், 'டீமா' ஆலோசகர் பெரியசாமி, 'ைஹ-டெக்' இன்டர்நேஷனல் நிர்வாக இயக்குனர் ராயப்பன் ஆகியோர் பங்கேற்றனர்.
எதிர்காலத்தில், குறு, சிறு தொழில்களை பாதிக்கக்கூடிய மூன்று அம்சங்கள் குறித்து பேசினார். 'டிஜிட்டல் பாஸ்போர்ட்', உற்பத்தியாளர்களுக்கு தீவிர பொறுப்புகளை புரிதல், திறனற்ற குறைபாடுகளை சமாளிப்பது குறித்தும், 'இன்டஸ்ட்ரி -4.0' மாற்றத்துக்கு தயாராகுதல் குறித்து விளக்கினார்.
'இன்ஜெக்ஸ் நாலெஜ்' நிறுவன முதன்மை செயல் அலுவலர் ஜெயமோகன், மத்திய, மாநில அரசுகளின் உதவி திட்டங்கள் குறித்து பேசினார்.
'டீமா' தலைவர் முத்துரத்தினம் பேசுகையில், 'பயிலரங்கின் முக்கிய அம்சம், விழிப்புணர்வுக்காக மட்டுமல்ல; மாற்றத்துக்கான துாண்டுதலாகவும் இருக்கிறது. புதிய பொருளாதார சூழல் ஏற்கனவே துவங்கியுள்ளது; அதற்காக, டீமா உறுப்பினர்கள் தயார்படுத்தப்படுவார்கள்.
சர்வதேச அளவிலான புதிய விதிமுறைகளை எதிர்கொள்ள வசதியாக, விரைவில் குழு அமைக்கப்படும். 'டிஜிட்டல் பாஸ்போர்ட்' 'கார்பன்' உமிழ்வு கட்டுப்பாடு' ஆகிய எதிர்பார்ப்புகள் முழுமையாக பூர்த்தி செய்யப்படும்,'' என்றார்.