/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு
வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு
வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு
வாரச்சந்தையில் அதிகரிக்கும் திருட்டு
ADDED : மார் 25, 2025 07:01 AM
காங்கயம்; காங்கயம் பஸ் ஸ்டாண்ட் அருகே வாரச்சந்தை வளாகம் செயல்படுகிறது. வாரம் தோறும் திங்கட்கிழமை கூடும் இந்த சந்தையில் சுற்றுப் பகுதியிலிருந்து 500க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கடை வைக்கின்றனர்.
அதிகாலையில் துவங்கும் சந்தை மாலை நீண்ட நேரம் வரை நடைபெறும். வியாபாரிகள், வாடிக்கையாளர்கள் என கூட்டம் கலகலப்பாக காணப்படும். தற்போது சந்தை வளாகத்தில் கட்டுமானப் பணிகள் நடப்பதால், கடைகள் குறுகிய இடத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்கள் வழக்கத்தை விட அதிகமான நெரிசலில் சென்று வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.இந்த கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி தங்கள் கைவரிசையைக் காட்டும் வகையில் சில திருட்டு நபர்கள் தற்போது சந்தை வளாகத்தில் வலம்வரத் துவங்கியுள்ளனர்.
கடந்த வாரத்தில் மட்டும் மூன்று பேரிடம் மொபைல் போன்கள் திருடப்பட்டுள்ளது. சிறிய அளவிலான தொகைகளும் திருடு போவதும் தவிர்க்க முடியாமல் உள்ளது.இதற்கு தீர்வு காணும் வகையில் திங்கட்கிழமை சந்தை பகுதியில் போலீசார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும்.