Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மத்திய அரசு சான்றுடன் 'டேலி' இலவச பயிற்சி

மத்திய அரசு சான்றுடன் 'டேலி' இலவச பயிற்சி

மத்திய அரசு சான்றுடன் 'டேலி' இலவச பயிற்சி

மத்திய அரசு சான்றுடன் 'டேலி' இலவச பயிற்சி

ADDED : மார் 22, 2025 10:57 PM


Google News
திருப்பூர்: இலவச கணினி கணக்கியல் மற்றும் கம்ப்யூட்டர் 'டேலி 'பயிற்சிக்கான நேர்காணல், கனரா வங்கி ஊரக வேலை வாய்ப்பு பயிற்சி நிலையத்தில், 26ம் தேதி நடக்கிறது.

திருப்பூர் முதலிபாளையம் பிரிவில், கனரா வங்கியில் ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், கிராமப்புற மக்களுக்கு இலவச தொழிற்பயிற்சி அளித்து வருகிறது. அதன்படி, இலவச கணினி கணக்கியல் மற்றும் 'கம்ப்யூட்டர் டேலி' பயிற்சி வகுப்பு விரைவில் துவங்க இருக்கிறது.

பயிற்சி பெறுவோரை தேர்வு செய்வதற்கான நேர்காணல், வரும் 26ம் தேதி நடக்க உள்ளது. எழுத படிக்க தெரிந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட இருபாலரும் பங்கேற்கலாம். இலவச பயிற்சி பெறும் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்க, இலவச விடுதி வசதியும் உள்ளது.

முப்பது நாட்கள் நடக்கும் இலவச பயிற்சி நிறைவு பெற்றதும், மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். பிறகு, தொழில் துவங்குவதற்கான ஆலோசனையும் வழங்கப்படும்.

பயிற்சிக்கு விண்ணப்பிக்க, 'கனரா வங்கி கிராமப்புற சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிலையம், வஞ்சியம்மன் கோவில் எதிரில், முதலிபாளையம் பிரிவு, காங்கயம் ரோடு, திருப்பூர்' என்ற முகவரிக்கு நேரில் வரலாம். மேலும் விவரங்களுக்கு, 94890 43923, 99525 18441, 86105 33436 என்ற எண்களில் அணுகலாம் என, பயிற்சி நிலைய இயக்குனர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us