/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்' லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., 'சஸ்பெண்ட்'
ADDED : மார் 22, 2025 10:57 PM
திருப்பூர்: பல்லடத்தில், 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய பெண் வி.ஏ.ஓ., சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
பல்லடம், கே.அய்யம்பாளையத்தில் வி.ஏ.ஓ.,வாக ரேவதி, 44 என்பவர் பணியாற்றி வருகிறார். இவரிடம், சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி, பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக ஒப்பந்ததாரர் கதிர்வேல் என்பவர் விண்ணப்பித்தார். சான்றிதழ் வழங்க வி.ஏ.ஓ., ரேவதி, 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். இதை வழங்க விரும்பாத கதிர்வேல், திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரையின் படி, வி.ஏ.ஓ., விடம் லஞ்ச பணத்தை கொடுக்கும் போது, கையும் களவுமாக கைது செய்தனர்.
இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் லஞ்ச ஒழிப்பு போலீசார் வருவாய்த்துறைக்கு பரிந்துரை செய்தனர். தொடர்ந்து, திருப்பூர் ஆர்.டி.ஓ., மோகனசுந்தரம், லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., ரேவதியை 'சஸ்பெண்ட்' செய்து நேற்று உத்தரவிட்டார்.