ADDED : மே 20, 2025 11:52 PM
திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா கல்லுாரியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
கல்லுாரி வளாகத்தில், 4.25 கோடி ரூபாய் மதிப்பில் புதியதாக 10 வகுப்பறைகள், 2 கழிப்பிடங்கள் கட்டப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா சென்னையில் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. காணொலி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் இதனை துவக்கி வைத்தார்.
கல்லுாரி வளாகத்தில் நடந்த இதற்கான விழாவில், எம்.பி., சுப்பராயன், மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.