/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம் சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்
சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்
சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்
சர்வதேச வர்த்தக வாய்ப்புகளை வசமாக்க புதிய முதலீட்டு மானிய திட்டம் அவசியம்
ADDED : மே 20, 2025 11:52 PM
திருப்பூர்; இந்திய பொருளாதார வளர்ச்சியில், ஜவுளி ஏற்றுமதி முக்கிய பங்கு வகிக்கிறது. நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதியில், அமெரிக்கா, 39 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் இருக்கிறது.
ஐரோப்பிய நாடுகள், 29 சதவீத பங்களிப்புடன் இரண்டாவது இடத்திலும், 9 சதவீத பங்களிப்புடன் பிரிட்டன் நான்காம் இடத்திலும், 8 சதவீத பங்களிப்புடன், ஐக்கிய அரபு நாடுகள் நான்காவது இடத்திலும் உள்ளன.
மிகவும் எதிர்பார்த்திருந்த, பிரிட்டன் விரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்தாண்டு இறுதிக்குள், ஐரோப்பிய யூனியனுடன் ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. வரும் ஜூலை 8 ம் தேதிக்குள், அமெரிக்காவுடன், குறைந்தபட்ச வர்த்தக ஒப்பந்தம் ஏற்படவும் முயற்சி நடந்து வருகிறது. வர்த்தக ஒப்பந்தங்கள் உருவாகும் போது, தற்போதைய ஆயத்த ஆடை ஏற்றுமதி, சில ஆண்டுகளில் இரட்டிப்பாக உயரும் என்பது, பொருளாதார நிபுணர்களின் கணிப்பு.
இருப்பினும், புதிய வாய்ப்புகளை முறையாக பயன்படுத்த, கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியதும் மிக அவசியம். பின்னலாடை தொழிலில் சாதகமான சூழல் நிலவுவதால், புதிய நிறுவனங்களை துவக்குவதற்கான முதலீட்டு மானியம் வழங்கும் திட்டங்களை மத்திய அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பாக, நீண்ட நாள் பேச்சளவில் இருக்கும், பி.எல்.ஐ., எனப்படும், உற்பத்தி சார் மானிய திட்டத்தை, மத்திய அரசு அதிக கெடுபிடியில்லாமல் செயல்படுத்த முன்வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.