Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/'ராமகிருஷ்ணர் கோவில் நிறுவுவது உலகுக்கு நன்மை'

'ராமகிருஷ்ணர் கோவில் நிறுவுவது உலகுக்கு நன்மை'

'ராமகிருஷ்ணர் கோவில் நிறுவுவது உலகுக்கு நன்மை'

'ராமகிருஷ்ணர் கோவில் நிறுவுவது உலகுக்கு நன்மை'

ADDED : ஜன 20, 2024 02:32 AM


Google News
Latest Tamil News
பொங்கலூர்;'ராமகிருஷ்ணர் கோவில் நிறுவப்படுவது நாட்டுக்கும், உலகுக்கும் நல்லது,' என்று படியூரில் நடந்த அடிக்கல் நாட்டு விழாவில் சுவாமி கவுதமானந்தஜி மஹராஜ் பேசினார்.

திருப்பூர் அருகே படியூர் - கைகாட்டி அருகே, 4.5 ஏக்கரில், சுவாமி விவேகானந்தா சேவாலயம், மருத்துவமனை, கோசாலை, வேத பாடசாலை கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது. விவேகானந்தா சேவாலய நிர்வாகி செந்தில்நாதன் வரவேற்றார்.

இதனை அகில உலக ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் உப தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் துவக்கி வைத்து அவர் பேசியதாவது:

யார் எந்த தேவதைக்கு பூஜை செய்கிறார்களோ அவர்களுக்கு அந்த தேவதையின் சக்தி கிடைக்கும். அந்த சக்தி அன்பு செலுத்துவதில், ஏழைகளுக்கு நன்மை செய்வதில் கிடைக்கிறது. பக்தி, தியானம், நற்பணி செய்வதில் கிடைக்கிறது. சக்தி ஞானத்தை அடைந்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும்.

ராமகிருஷ்ண கோவில் எங்கெல்லாம் வருகிறதோ அங்கு பகவானுக்கு பூஜை, ஆன்மீக வழிபாடு நடக்கும். சேவாலயத்தில் ஏழைகள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக பயிற்சி கொடுக்கப்படும். ஆன்மீக வாழ்வியலில் முன்னேற வைத்து பகவான் அருளை கொடுக்கும். ராமகிருஷ்ணர் கோவில் எங்கு நிறுவப்படுகிறதோ அது நாட்டிற்கும், உலகிற்கும் நல்லது.

இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் சுவாமி சர்வரூபானந்தர், சுவாமி தத்பாஷானந்தர், சுவாமி ஹரி வரதானந்தர், யாதவேதானந்தர், அர்க்கபிரபானந்தர், விவேகானந்தா பள்ளி தாளாளர் பாலசுந்தரம் உட்பட பலர் கலந்து கொண்டனர். விவேகானந்த சேவாலய அமைப்பாளர் செந்தில்நாதன் நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us