Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு; முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

ADDED : மார் 28, 2025 10:48 AM


Google News
Latest Tamil News
சென்னை: இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது என முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

இந்திய தொழில்கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) தென்னிந்திய மாநாட்டை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சென்னையை உலகத்தரம் வாய்ந்த நகரமாக மாற்ற 3ஆவது திட்டம் தயாராகி வருகிறது. பசுமைப் பொருளாதார துறையில் முதலீடு செய்ய வேண்டும்.

தொழில்துறைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி இலக்கு. அனைவரையும் உள்ளடக்கி வளர்ச்சிக்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியாவின் வளர்ச்சியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பொருளாதார வளர்ச்சியில் தமிழக இரண்டாவது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான தொழிற்சாலைகள் தமிழகத்தில் உள்ளன. கோவை, திருச்சி, ஒசூர் போன்ற மாவட்டங்கள் பெருமளவில் வளர்ச்சி பெற்றுள்ளன; கடந்த 11 மாதங்களில் 12.6 பில்லியன் டாலர் அளவிற்கு மின்சாதனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு 12.11 சதவீதம் பங்களிப்பு செய்து வருகிறது.

கடந்த 3 ஆண்டுகளில், தமிழகம் 8 சதவீதத்துக்கும் மேல் பொருளாதார வளர்ச்சி அடைந்து, இந்தியாவின் 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வருகிறது. தமிழகத்தை மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடாமல், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டும். நீர்வளங்களை திறம்பட நிர்வகித்தல், நீர் சேகரிப்பு உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us