Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ தீபாவளி ஷாப்பிங் துவக்கம்; களைகட்டின கடைவீதிகள்

தீபாவளி ஷாப்பிங் துவக்கம்; களைகட்டின கடைவீதிகள்

தீபாவளி ஷாப்பிங் துவக்கம்; களைகட்டின கடைவீதிகள்

தீபாவளி ஷாப்பிங் துவக்கம்; களைகட்டின கடைவீதிகள்

ADDED : செப் 22, 2025 12:34 AM


Google News
திருப்பூர்; கடைசிநேர கூட்ட நெரிசலில் சிக்கித்தவிக்காமல், திருப்பூரில், தீபாவளி பண்டிகை கால விற்பனை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்குவதற்கான விசாரணை முன்கூட்டியே துவங்கியுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கும் போது, திருப்பூர் கடைவீதிகள் களைகட்டும். ஊத்துக்குளி, பல்லடம், அவிநாசி சுற்றுப்பகுதிகளை சேர்ந்த மக்கள், திருப்பூர் வந்துதான், ஜவுளி, பர்னிச்சர் வகைகள், வீட்டுஉபயோக பொருட்கள், மொபைல் போன் உள்ளிட்ட பொருட்களை வாங்குகின்றனர்.

போனஸ் கிடைக்கும் என்பதால், வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது, நடுத்தர மக்களின் திட்டமாக இருக்கிறது. வடமாநில தொழிலாளர்களும், அதிகம் கடைக்கு வந்து செல்கின்றனர்.

பண்டிகை நெருங்கும் போது, கூட்டம் கட்டுக்கடங்காத அளவுக்கு வருகிறது. குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை மட்டும், பண்டிகைகால விற்பனையால் திருப்பூர் நகரமே பரபரப்பாக காணப்படும்.

கூட்ட நெரிசலில் சிக்கி தவிப்பதை தவிர்க்கவும், வெளிமாவட்டங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் முன்கூட்டியே, பண்டிகை கால பர்ச்சேஸை துவங்கிவிட்டனர்.

நேற்று, புதுமார்க்கெட் வீதி, குமரன்ரோடு, மாநகராட்சி ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி ரோடு பகுதிகளில், மக்கள் கூட்டம், வழக்கத்தைவிட அதிகமாக காணப்பட்டது.

பொதுமக்கள் கூறுகையில், ''தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் செல்ல வேண்டும்; அப்போது, கடைகளில் பொருட்கள் வாங்க முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். போனஸ் எப்படியும் கைக்கு வரும் என்பதால், முன்கூட்டியே பொருட்களை வாங்கி, தயாராக இருக்கலாம்; தீபாவளி, திங்கட்கிழமை வருவதால், முந்தைய வியாழன் அல்லது வெள்ளிக்கிழமையே புறப்பட்டு செல்ல லாம் என்பதற்காக, முன்கூட்டியே ஜவுளி மற்றும் பொருட்கள் வாங்க வந்திருக்கிறோம்'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us