/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ முதியவருக்கு செயற்கைக்கால் வீட்டுக்கே சென்று சேவை முதியவருக்கு செயற்கைக்கால் வீட்டுக்கே சென்று சேவை
முதியவருக்கு செயற்கைக்கால் வீட்டுக்கே சென்று சேவை
முதியவருக்கு செயற்கைக்கால் வீட்டுக்கே சென்று சேவை
முதியவருக்கு செயற்கைக்கால் வீட்டுக்கே சென்று சேவை
ADDED : செப் 22, 2025 12:35 AM

பல்லடம்; பல்லடம் அடுத்த வடுகபாளையம் ஊராட்சி, ஆலுாத்துப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 67. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த இவரின் இடது கால் அகற்றப்பட்டது. நடமாட்டம் இன்றி வீட்டிலேயே முடங்கினார்.
தகவல் அறிந்த திருப்பூர் மாவட்ட சக் ஷம் அமைப்பினர், அவருக்கு செயற்கை கால் பொருத்த முன்வந்தனர். திருப்பூர் பழனிசாமி பொன்னம்மாள் அறக்கட்டளை வாயிலாக, முதியவரின் வீட்டுக்கே சென்ற சக் ஷம் அமைப்பு நிர்வாகிகள், அவருக்கு செயற்கை கால் பொருத்தினர். வீட்டில் முடங்கி கிடந்த முதியவருக்கு இது ஆறுதலாக அமைந்தது.