/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ரூ.2.96 கோடி பணிகளுக்கு எம்.பி., ராஜா அடிக்கல் ரூ.2.96 கோடி பணிகளுக்கு எம்.பி., ராஜா அடிக்கல்
ரூ.2.96 கோடி பணிகளுக்கு எம்.பி., ராஜா அடிக்கல்
ரூ.2.96 கோடி பணிகளுக்கு எம்.பி., ராஜா அடிக்கல்
ரூ.2.96 கோடி பணிகளுக்கு எம்.பி., ராஜா அடிக்கல்
ADDED : செப் 22, 2025 12:33 AM

அவிநாசி; அவிநாசி அடுத்த செம்பியநல்லுார் ஊராட்சிக்குட்பட்ட அரசு பணியாளர் நகர் - - எஸ்.மேட்டுப்பாளையம் இணைக்கும் சாலையில் நல்லாறு நதியில் மாநிலச் சிறப்பு உதவி திட்டத்தில் 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் அமைக்க நீலகிரி எம்.பி., ராஜா அடிக்கல் நாட்டினார்.
திருமுருகன்பூண்டி ஒன்றியம், வேலாயுதம்பாளையம் ஊராட்சி பகுதியில் உள்ளூர் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர் தேக்க தொட்டி, துலுக்கமுத்துார் ஊராட்சிக்குட்பட்ட நல்ல கட்டிப்பாளையம் பகுதியில் பயணிகள் நிழற்குடை, திருமுருகன்பூண்டி நகராட்சி 13வது வார்டு பகுதியில் திறன்மிகு வகுப்பறை அமைப்பது உள்பட மொத்தம் 2.96 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
மேயர் தினேஷ்குமார், தி.மு.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் சிவபிரகாஷ், பழனிசாமி, பால்ராஜ், நகரச் செயலாளர் வசந்த் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.