/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/தந்தையுடன் செல்ல மறுப்பு பாசப்போராட்டத்தில் சிறுவன் * திருப்பூரில் நெகிழ்ச்சிதந்தையுடன் செல்ல மறுப்பு பாசப்போராட்டத்தில் சிறுவன் * திருப்பூரில் நெகிழ்ச்சி
தந்தையுடன் செல்ல மறுப்பு பாசப்போராட்டத்தில் சிறுவன் * திருப்பூரில் நெகிழ்ச்சி
தந்தையுடன் செல்ல மறுப்பு பாசப்போராட்டத்தில் சிறுவன் * திருப்பூரில் நெகிழ்ச்சி
தந்தையுடன் செல்ல மறுப்பு பாசப்போராட்டத்தில் சிறுவன் * திருப்பூரில் நெகிழ்ச்சி
ADDED : ஜன 26, 2024 01:16 AM
திருப்பூர்;திருப்பூரில், ரோட்டில் மாயமான, ஐந்து வயது சிறுவனை போலீசாரிடம் ஒப்படைக்காமல், வளர்த்து வந்தது தொடர்பாக, இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே போதை ஆசாமி ஒருவர், தனது, ஆறு வயது சிறுவனை கடந்த ஆண்டு ஜன., மாதம் தவறவிட்டார். புகாரின் பேரில், திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடி வந்தனர். மாயமான சிறுவன், கும்பகோணத்தில் இருப்பது தெரிந்தது.
தனிப்படை போலீசார் சிறுவனை மீட்டு விசாரித்தனர். கார்த்திகேயன், 45 என்பவர், திருப்பூரில் ஓட்டல் வேலை செய்த போது, ரயில்வே ஸ்டேஷன் அருகே வழிதெரியாமல் ரோட்டில் சிறுவன் அழுதபடி சுற்றி திரிந்தார். பின், அந்த சிறுவனை ஊருக்கு அழைத்து சென்று, தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து, தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்து, தங்கள் குழந்தைகளை போல வளர்த்து வந்தது தெரிந்தது.
அதன்பின், சிறுவனை போலீசாரிடம் ஒப்படைக்காமல் அழைத்து சென்றதற்காக, கார்த்திகேயன், அவரது தம்பி முருகதாஸ், 40 ஆகியோரை கைது செய்து, ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்தனர். மீட்கப்பட்ட சிறுவனை, பெற்றோரிடம் ஒப்படைத்த போது, அவன் தனது தந்தையுடன் செல்ல மறுத்தான். பின், வலுக்கட்டாயப்படுத்தி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டான்.


