/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/விவேகானந்தர் வழியில் மாணவர் நடக்க வேண்டும்!விவேகானந்தர் வழியில் மாணவர் நடக்க வேண்டும்!
விவேகானந்தர் வழியில் மாணவர் நடக்க வேண்டும்!
விவேகானந்தர் வழியில் மாணவர் நடக்க வேண்டும்!
விவேகானந்தர் வழியில் மாணவர் நடக்க வேண்டும்!
ADDED : ஜன 13, 2024 11:36 PM

அவிநாசி;அவிநாசி செந்துார் மஹாலில், பூண்டி ஸ்ரீவிவேகானந்தா சேவாலயம் சார்பில், சுவாமி விவேகானந்தரின், 162வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
செந்தில் முருகன் சிட் பண்ட்ஸ் உரிமையாளர் மாரப்பன், தலைமை வகித்தார். சேவாலய நிர்வாக அறங்காவலர் செந்தில்நாதன், வரவேற்றார். 'நிற்க, அதற்கு தக' என்ற தலைப்பில், கோவை பேராசிரியர் ஜெயந்த்ஸ்ரீ பாலகிருஷ்ணன் பேசுகையில், ''இளைஞர்கள் அதிகம் கொண்ட நம் நாட்டில், நெருப்பில் துாவிய விதை போல, சுவாமி விவேகானந்தரின் ஆற்றல் வெளிப்பட்டது. இந்த தேசத்தை அவர் மிகவும் நேசித்தார். அன்னிய ஆட்சியில், அவரது சுதந்திர கனல் தெறித்த, ஜெய்ஹிந்த் என்ற வார்த்தை வீர கர்ஜனையாக பலரை தட்டியெழுப்பியது.
அவர் பள்ளி படிப்போடு கற்றலை விடவில்லை; இந்த தேசத்தை கற்றார்; அதன் பெருமை களை கற் றார். அவர் வழி மாணவர்கள் நடக்க வேண்டும்'' என்றார். குஜராத் ராமகிருஷ்ண மடத்தை சேர்ந்த சுவாமி அலிப் தேவினந்தர், சொற்பொழிவாற்றினார்.
விழாவில் ஒரு பெண்ணுக்கு, தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.


