/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு
மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு
மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு
மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு
ADDED : செப் 16, 2025 12:12 AM

திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகா, சந்தைபாளையத்தை சேர்ந்த கல்பனா, 35. கைகளை இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கிராம உதவியாளர் பணி வழங்க கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.
மனு அளித்த கல்பனா கூறியதாவது:
எனது கணவர் செந்தில், கடந்த 2021ல் இறந்து விட்டார். நான், நான்காம் வகுப்பு படிக்கும்போதே, விபத்தில் இடது கை இழந்த மாற்றுத்திறனாளி; ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறேன்; எனக்கு வேறு வருமானம் ஏதுமல்லை.
மாற்றுத்திறனாளியான எனக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனது குழந்தையுடன், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கருணை அடிப்படையில் எனக்கு, கிராம உதவியாளர் பணி வழங்கி கை கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.