/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மனு வாங்க டி.ஆர்.ஓ., மறுப்பு? சமூக ஆர்வலர்கள் போராட்டம் மனு வாங்க டி.ஆர்.ஓ., மறுப்பு? சமூக ஆர்வலர்கள் போராட்டம்
மனு வாங்க டி.ஆர்.ஓ., மறுப்பு? சமூக ஆர்வலர்கள் போராட்டம்
மனு வாங்க டி.ஆர்.ஓ., மறுப்பு? சமூக ஆர்வலர்கள் போராட்டம்
மனு வாங்க டி.ஆர்.ஓ., மறுப்பு? சமூக ஆர்வலர்கள் போராட்டம்
ADDED : செப் 16, 2025 12:08 AM

திருப்பூர்; மனுவை வாங்க மறுத்ததாக டி.ஆர்.ஓ., மீது புகார் கூறி, சமூக ஆர்வலர்கள், குறைகேட்பு கூட்ட அரங்கினுள் தர்ணாவில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில், திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்க தலைவர் சரவணன், சமூக ஆர்வலர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி, நுாதன முறையில் மனு அளித்தார். மூன்று குரங்குகள் படம் பொறிக்கப்பட்ட, 'சமூக ஆர்வலர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. எவ்வித அச்சுறுத்தலான சூழலிலும் மக்கள் பணி செய்வோம்,' என்கிற வாசகங்கள் இடம்பெற்ற மெகா பேனரை கழுத்தில் அணிந்தபடி வந்தார்.
மனுவை பெற மறுப்பு
சரவணன், சண்முகசுந்தரம், சுப்பிரமணியம், கிருஷ்ணசாமி உள்பட சமூக ஆர்வலர்கள், சாமளாபுரத்தில் சமூக ஆர்வலர் பழனிசாமி கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, சமூக ஆர்வலர்களை பாதுகாக்க தனி சட்டம் உருவாக்க வேண்டும்; பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என, கோரிக்கை மனு எழுதி கொண்டுவந்தனர்.
கலெக்டர் வராததால், நேற்று, டி.ஆர்.ஓ., கார்த்திகேயன் தலைமையிலான அதிகாரிகள், பொதுமக்களிடமிருந்த மனுக்களை பெற்றனர். இந்நிலையில், தாங்கள் கொண்டுவந்த மனுவை டி.ஆர்.ஓ., வாங்க மறுத்ததாக கூறிய சமூக ஆர்வலர்கள், குறைகேட்பு கூட்ட அரங்கினுள்ளேயே தரையில் அமர்த்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
நல்லுார் நுகர்வோர் நல மன்ற தலைவர் சண்முகசுந்தரம், ''மாவட்ட கூடுதல் நீதிபதி நிலை அலுவலரான டி.ஆர்.ஓ. கார்த்திகேயன், சமூக ஆர்வலர்களை, முறையில்லாத வகையில், தகாத வார்த்தைகளில் பேசுகிறார். அதிகாரி இப்படி வார்த்தையை பேசலாமா,'' என்றார். இதனையறிந்து சமூக ஆர்வலர்களை சமாதானப்படுத்திய மற்ற அதிகாரிகள், மனுக்களை பெற்றுக்கொண்டனர்.
சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
கடந்த 10ம் தேதி மாலை, 4:00 மணிக்கு, கலெக்டர் தலைமையில் நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவித்தனர். கலெக்டர் வராததால், டி.ஆர்.ஓ., தலைமையில் நடத்த திட்டமிட்டனர். அறிவித்தபடி, கலெக்டர் தலைமையில் கூட்டத்தை நடத்துங்கள் என கூறினோம். ஆனால் டி.ஆர்.ஓ., கூட்டத்தை ரத்து செய்வதாக கூறி, சென்றார். அதன்பின், கலெக்டரை சந்தித்து பேசி, மாலை, 6:30 மணிக்கு, நுகர்வோர் பாதுகாப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டது.
இவற்றை மனதில் வைத்துக்கொண்டுதான் தற்போது, பொதுமக்கள் குறைகேட்பு கூட்டத்தில், டி.ஆர்.ஓ., எங்கள் மனுக்களை பெற மறுத்துள்ளார். அதுமட்டுமின்றி, தவறான வார்த்தையும் பயன்படுத்தினார். வருவாய்த்துறையின் உச்சபட்ச அதிகாரி, மக்கள் மன்றத்தில், சமூக ஆர்வலர்களிடமிருந்து, மனுக்களை பெற மறுப்பது, தவறான முன்னுதாரணம்.
திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை எந்த அதிகாரியும், மனுக்களை பெற மறுத்ததில்லை; முதல் முறையாக இப்படியோரு சம்பவம் நடந்தது, வேதனை அளிக்கிறது. மாவட்ட நிர்வாகம், உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.