/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ இயந்திரங்களுக்கு 'ரீகண்டிஷன் சென்டர்' ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு இயந்திரங்களுக்கு 'ரீகண்டிஷன் சென்டர்' ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
இயந்திரங்களுக்கு 'ரீகண்டிஷன் சென்டர்' ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
இயந்திரங்களுக்கு 'ரீகண்டிஷன் சென்டர்' ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
இயந்திரங்களுக்கு 'ரீகண்டிஷன் சென்டர்' ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : செப் 16, 2025 07:04 AM

திருப்பூர்: இறக்குமதி இயந்திரங்களுக்கான தொடர் சேவைகளை பெற ஏதுவாக, 'ரீகண்டிஷன் சென்டர்' திறக்க, ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நுாற்பாலைகள், ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள், ஆடை உற்பத்தி நிலையங்கள், சாய ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள், துணிகளை உற்பத்தி செய்யும் நிட்டிங் நிறுவனங்கள், பிரின்டிங் என, ஒட்டுமொத்த ஜவுளித்தொழிலிலும், வெளிநாட்டு இயந்திரங்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.
உற்பத்தி செலவை குறைக்கவும், தொழிலாளர் பற்றாக்குறையை நீக்கவும், உற்பத்தி வேகத்தை அதிகரிக்கவும், புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை இறக்குமதி செய்து பயன்படுத்துகின்றனர். அவ்வாறு, இறக்குமதி இயந்திரங்கள் பயன்படுத்தும் போது, திடீரென பழுதான, அவற்றை சர்வீஸ் செய்வதற்கான வசதி உள்ளூரில் இல்லை.
நவீன இயந்திரங்களுக்கான உதிரி பாகங்களும் கிடைப்பதில்லை; தேவையான பொருட்களையும், இறக்குமதி செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதனால், வழக்கமான உற்பத்தி பணி பாதிக்கிறது. இந்நிலையை சமாளிக்க, முன்னணி இயந்திர வடிவமைப்பு நிறுவனங்களின் அங்கீகரிக்கப்பட்ட ரீகண்டிஷன் சென்டர், அந்தந்த கிளஸ்டர்களில் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாளுக்கு நாள் வலுத்து வருகிறது.
இதுகுறித்து திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தியாளர்கள் கூறுகையில், 'இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா உட்பட, பல்வேறு நாடுகளில் இருந்து, ஆடை உற்பத்திக்கு தேவையான இயந்திரங்களை இறக்குமதி செய்து வருகிறோம். அவற்றில் பழுது ஏற்படும் போது, உடனுக்குடன் சீர்செய்யவும், உதிரி பாகங்களை தேவையான போது பெறவும் ஏதுவாக, 'கிளஸ்டர்' வாரியாக, ரீகண்டிஷன் சென்டர் எனப்படும் சேவை மையம் நிறுவப்பட வேண்டும்; அரசு அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.