/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஜெய்வாபாய் பள்ளியில்நாளை யோகா நிகழ்ச்சி ஜெய்வாபாய் பள்ளியில்நாளை யோகா நிகழ்ச்சி
ஜெய்வாபாய் பள்ளியில்நாளை யோகா நிகழ்ச்சி
ஜெய்வாபாய் பள்ளியில்நாளை யோகா நிகழ்ச்சி
ஜெய்வாபாய் பள்ளியில்நாளை யோகா நிகழ்ச்சி
ADDED : ஜூன் 20, 2024 04:53 AM
திருப்பூர், : சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஜெய்வாபாய் பள்ளியில் நாளை, 1000 பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடக்கிறது.
இந்தியாவின் யோகா கலையை போற்றும் வகையில், ஜூன் 21ம் தேதி உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. உலக சமுதாய சேவா சங்கம், மனவளக்கலை மன்ற அறக்கட்டளை சார்பில், ஒரு மாத இலவச யோகா பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, நாளை(21ம் தேதி), திருப்பூர் ஜெய்வாபாய் பள்ளியில், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் என, 1000 பேர் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி நடக்கிறது. காலை, 6:00 மணிக்கு துவங்கி, 7:30 வரை, யோகா நடக்க உள்ளது.
இறைவணக்கம் மற்றும் குரு வணக்கத்துடன் துவங்கும் யோகா நிகழ்ச்சியில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பங்கேற்று பேசுகிறார். யோகா கலையில் விருப்பமுள்ளவர்கள், சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.