/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம் எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம்
எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம்
எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம்
எண்ணும் எழுத்தும் பயிற்சி துவக்கம்
ADDED : ஜூன் 20, 2024 04:53 AM
திருப்பூர் : தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி துவங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், புதிய மற்றும் எளிய முறையில் கற்றல், கற்பித்தல் செயல்பாடு குறித்து, துவக்க பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. அவ்வகையில், புதிய கல்வியாண்டு துவங்கியுள்ள நிலையில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பாடம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி திருப்பூர், கே.எஸ்.சி., பள்ளி யில் நேற்று துவங்கியது.
மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், மதுரையில் நடந்த மாநில பயிற்சி முகாமில் பங்கேற்ற, மாநில கருத்தாளர்கள் பங்கேற்ற துவக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு பாடம் கற்பிப்பது குறித்து பயிற்சி வழங்கினர்.
திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கயம், பல்லடம், அவிநாசி உட்பட எட்டு வட்டாரங்களை சேர்ந்த, ஆசிரியர்கள் இம்முகாமில் பங்கேற்றனர். மடத்துக்குளம், உடுமலை, தாராபுரம் வட்டார ஆசிரியர்களுக்கு, உடுமலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சியளிக்கப்பட்டது.
இன்றுடன் மூன்றாம் வகுப்பு வரையிலான ஆசிரியர்களுக்கு பயிற்சி முடிகிறது. ஜூன், 20, 21ம் தேதி நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.