/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ பயன்பாடு இல்லாத கட்டடம் எதற்கு; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி பயன்பாடு இல்லாத கட்டடம் எதற்கு; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி
பயன்பாடு இல்லாத கட்டடம் எதற்கு; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி
பயன்பாடு இல்லாத கட்டடம் எதற்கு; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி
பயன்பாடு இல்லாத கட்டடம் எதற்கு; நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி நோயாளிகள் நலச்சங்க கூட்டத்தில் கேள்வி
ADDED : ஜூன் 16, 2024 12:43 AM

பல்லடம்:பல்லடம் அரசு மருத்துவமனையில், நோயாளிகள் நலச்சங்க ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் மாவட்ட சப்-கலெக்டர் சவுமியா தலைமை வகித்தார். தலைமை மருத்துவர் டாக்டர் ராமசாமி வரவேற்றார். தாசில்தார் ஜூவா, நகராட்சி தலைவர் கவிதாமணி, இந்திய மருத்துவர் சங்க தேசிய செயற்குழு உறுப்பினர் டாக்டர் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், தன்னார் வலர்கள் பேசியதாவது:
அரசு மருத்துவமனையில் உதவியாளர்கள், போதிய துாய்மை பணியாளர்கள், இரவு காவலர் இல்லை. காலியாக உள்ள மருத்துவர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 50 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட காத்திருப்பு அறை ஓராண்டுக்கு மேல் ஆகியும் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பது ஏன்?
பொதுமக்களின் பயன்பாட்டுக்காகவே இது கட்டப்பட்டது எனில், எதற்காக பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. எதற்காக உருவாக்கப்பட்டதோ அதற்கான பயன்பாட்டுக்கு கூட விடவில்லை எனில் ஏன் இக்கட்டடம் கட்டப்பட வேண்டும். இதனால் யாருக்கு என்ன பயன்?
இவ்வாறு பேசினர்.
தலைமை மருத்துவர் ராமசாமி பேசியதாவது: மருத்துவமனையில், 70க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், ஊழியர்கள் உள்ளோம். நோயாளிகளுக்கு சேவை செய்யத்தான் நாங்கள் உள்ளோம். குறைகள் ஏதாவது இருந்தால் கூறுங்கள்; திருத்தி கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் இங்கு சிகிச்சை கிடைக்கவில்லை என, நோயாளிகள் கோவைக்கு செல்லக்கூடாது என எதிர்பார்க்கிறோம். ஐந்து ஏக்கர் அரசு நிலம் கொடுத்தால் மிகப்பெரிய மருத்துவமனை கட்டித்தர தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை மனது வைத்தால் இது நடக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.