/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கோவை - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடுமணல் அருங்காட்சியகம் அமையுமா! வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு கோவை - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடுமணல் அருங்காட்சியகம் அமையுமா! வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
கோவை - ஈரோடு தேசிய நெடுஞ்சாலையில் கொடுமணல் அருங்காட்சியகம் அமையுமா! வரலாற்று ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

ADDED : ஜூன் 16, 2024 12:44 AM
திருப்பூர்:'கோவை - ஈரோடு இடைபட்ட பகுதியில், கொடுமணல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றங்கரையில் கொடுமணல் அமைந்திருக்கிறது. சென்னி மலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில், 18 கி.மீ தொலைவில் அமைந்திருப்பதால், திருப்பூர் மாவட்டத்துக்கும் தொடர்புடைய இடமாகவே இருக்கிறது. எனவே, 'இதுதொடர்பான அருங்காட்சியகத்தை திருப்பூர் மாவட்டம் சார்ந்து ஏற்படுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தொல்லியல் எச்சங்களும், மிச்சங்களும் நிறைந்துள்ள இப்பகுதியில், தமிழக தொல்லியல் துறை, சென்னை, பாண்டிச்சேரி மற்றும் தஞ்சை பல்கலை., பேராசிரியர் குழுவினர் அகழாய்வு மேற்கொண்டனர். அரிய வகை கல்மணிகள், வளையல், சங்குகள், மான் கொம்பு, கூரை ஓடு, கீறல் வரைவு மற்றும் தமிழ் பிராமி எழுத்துக்களுடன் கூடிய பானை ஓடு, சிவப்பு, கருப்பு நிற மட்கலங்கள், சுடுமண் பொருட்கள் என, ஏராளமான பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
---
கொங்கு மண்டலத்தின் பெருமை
வரலாற்று ஆய்வாளர்கள் மேற்கொண்ட கொடுமணல் அகழாய்வில், கிடைத்த ஆதாரங்கள் அடிப்படையில், கி.மு., 6ம் நுாற்றாண்டில் இருந்து, கி.பி., 2ம் நுாற்றாண்டு வரை பரபரப்பாக இயங்கிய மிகச்சிறந்த வணிக நகரம் என்ற சுவாரஸ்ய தகவல் கிடைத்திருக்கிறது.
தானியக்குதிரை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது; அங்கு, வேளாண் தொழில் மூலம் விளைவிக்கப்பட்ட தானியங்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன என்பது தெளிவாகியிருக்கிறது. கண்டெடுக்கப்பட்ட பல வண்ண கல் மணிகள், ஆபரணத் தொழில் நடந்ததற்கான தடயங்களாக உள்ளன.
கீழடி, ஆதிச்சநல்லுார் அகழாய்வு தெரிந்து வைத்துள்ள அளவுக்கு, மக்களிடம் கொடுமணல் குறித்த விழிப்புணர்வு இல்லை. கோவை - ஈரோடு நெடுஞ்சாலையில் அருங்காட்சியகம் அமைத்து, கண்டெடுக்கப்பட்ட பொருட்களை அங்கு வைத்து, காட்சிப்படுத்தினால், கொங்கு மண்டலத்தின் பெருமையாக இருக்கும்.
- சக்தி பிரகாஷ்
வரலாற்று ஆர்வலர் ஆதிவனம் அமைப்பு, ஈரோடு.
---
இளைய தலைமுறைக்கு பயன்!
திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில், 2,000, 3,000 ஆண்டு பழமையான தமிழர்களின் நாகரிகம் தொடர்பான சின்னங்கள் கண்டெடுக்கப்பட்டு கொண்டே இருக்கின்றன. ஊத்துக்குளி அருகே குமரிக்கல்பாளையத்திலும், ஏராளமான தொல்லியல் எச்சங்கள், தொல்லியல் துறையினரால் அடையாளம் காணப்பட்டிருக்கிறது.
அதுதொடர்பான ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பல இடங்களில் அத்தகை காலச்சுவடுகளை, சிலர் எடுத்து சென்று விடுகின்றனர்; சில இடங்களில் அவை சேதமடைந்துக் கிடக்கின்றன. எனவே, கொடுமணல் பகுதியில் ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் பொருட்கள், குமரிக்கல்பாளையத்தில் உள்ள தொல்லியல் பொருட்களை சேகரித்து, தனியாக அருங்காட்சியகம் ஏற்படுத்தி, அதன் வரலாற்றை தெரியப்படுத்தும் போது, இன்றயை இளைய தலைமுறையினருக்கு மிகுந்த பயன் தரும்.
- சுப்ரமணியம்
ஒருங்கிணைப்பாளர் களஞ்சியம் விவசாயிகள் சங்கம்
திருப்பூர், ஜூன் 16-
'கோவை - ஈரோடு இடைபட்ட பகுதியில், கொடுமணல் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொங்கு மண்டலத்தில் ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் நொய்யல் ஆற்றங் கரையில் கொடுமணல் அமைந்திருக்கிறது.
சென்னிமலையிலிருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில், 18 கி.மீ தொலைவில் அமைந்திருப்பதால், திருப்பூர் மாவட்டத்துக்கும் தொடர்புடைய இட மாகவே இருக்கிறது.
எனவே, 'இதுதொடர் பான அருங்காட்சியகத்தை திருப்பூர் மாவட்டம் சார்ந்து ஏற்படுத்த வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.