/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கேன்சர் சிகிச்சை மையம் 2025ல் பயன்பாட்டுக்கு வரும்! திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளையினர் திட்டவட்டம் கேன்சர் சிகிச்சை மையம் 2025ல் பயன்பாட்டுக்கு வரும்! திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளையினர் திட்டவட்டம்
கேன்சர் சிகிச்சை மையம் 2025ல் பயன்பாட்டுக்கு வரும்! திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளையினர் திட்டவட்டம்
கேன்சர் சிகிச்சை மையம் 2025ல் பயன்பாட்டுக்கு வரும்! திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளையினர் திட்டவட்டம்
கேன்சர் சிகிச்சை மையம் 2025ல் பயன்பாட்டுக்கு வரும்! திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளையினர் திட்டவட்டம்
ADDED : ஜூன் 16, 2024 12:45 AM

திருப்பூர்;''திருப்பூரில் அமையவுள்ள கேன்சர் சிகிச்சை மையம், நாட்டின் முன்னோடியாக திகழ வேண்டும் என்பதே கனவு'' என, திருப்பூர் ரோட்டரி நல அறக்கட்டளை தலைவர் முருகநாதன் கூறினார்.
திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் திருப்பூர் ரோட்டரி மக்கள் நல அறக்கட்டளை மற்றும் பொதுமக்கள் பங்களிப்புடன், 90 கோடி ரூபாய் மதிப்பில், கேன்சர் சிகிச்சை மையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதற்கான கட்டுமானப்பணிகள் நடந்து வருகின்றன.
சிகிச்சைக்கு தேவையான 'பங்கர்' எனப்படும் உபகரணம் வைப்பதற்கான கட்டட கட்டுமானப்பணி தற்போது நடந்து வருகிறது.இத்திட்டத்திற்கு, 30 கோடி ரூபாய் பொதுமக்கள் பங்களிப்பாக செலுத்தப்பட வேண்டும். நிதி திரட்டும் பணியில், ரோட்டரி அறக்கட்டளையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, 20 கோடி ரூபாய் நிதி திரட்டி வழங்கியுள்ளனர்.
அறக்கட்டளை தலைவர் டாக்டர் முருகநாதன் கூறியதாவது: திருப்பூரில் அமையவுள்ள கேன்சர் சிகிச்சை மையம், அதிநவீன வசதிகளுடன் அமையவுள்ளது. கேன்சர் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், அதை முற்றிலும் குணப்படுத்தும் வகையிலான மருத்துவ கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட உள்ளன.
ஆடை உற்பத்தி துறையில் முதலிடம் பெற்றிருப்பது போன்று, கேன்சர் சிகிச்சை வழங்கு வதிலும், இந்தியளவில் இந்த சிகிச்சை மையம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதே, நம் கனவு. அதற்கேற்றாற்போல் தேவை யான அனைத்து உபகரணம், கட்டமைப்பு வசதியை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறோம்.
பங்களிப்பு தொகையாக, 10 கோடி ரூபாய் அளவுக்கு அரசுக்கு வழங்க வேண்டி யிருக்கிறது. தொழில் துறையினர், தங்களது சமூக பங்களிப்பு நிதி திட்டத்தின் கீழ் நிதி கொடுத்து உதவ வேண்டும்.
அடுத்தாண்டு, 2025 ஏப்., மாதத்துக்குள் சிகிச்சையை துவங்குவதற்கான திட்டமிடலுடன் செயல்பட்டு வருகிறோம். இவ்வாறு, அவர் கூறினார்.